இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 புள்ளிகளையும், ஹஸ்ரத்துல்லா ஜசாய் 45 புள்ளிகளையும் பெற்றனர்.

விக்கெட்டுகளைப் பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பில் மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

210 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பதும் நிஷங்க ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.