குற்றச் செயல்களைச் செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வாள்வெட்டுக் கும்பல் நபர் , யாழ்.விமான நிலையத்தில் கைது

கோப்பாய் பிரதேசம் மற்றும் பல பகுதிகளில் வீடுகளை எரித்தல், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள், வாள்வெட்டு கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று , 03 வருடங்களின் பின்னர் , யாழ்ப்பாண விமான நிலையம் ஊடாக , நாட்டிற்குள் வர முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ய போலீசார் முயன்ற போது , இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இந்த குற்றவாளி மீண்டும் நாட்டிற்கு வருவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவரை யாழ்.விமான நிலையத்தில் வைத்து கைது செய்த பொலிஸார் , நேற்று முன்தினம் (22) யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர் , மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள நான்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 9 வழக்குகளுக்கு ஆஜராகவில்லை. அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.