சிறீதரனின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ்! – ரணில் பகிரங்கமாகத் தெரிவிப்பு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிவஞானம் சிறீதரன் எம்.பி. வெற்றி பெற மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சில நாட்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்குச் சென்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கூட்டம் முடிந்ததும் அவரது அறையை நோக்கி அவர் விரைந்தார். அப்போது ஜனாதிபதியின் அறைக்கு அருகில் ஜனாதிபதியை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

சார்ள்ஸைக் கண்டதும் ஜனாதிபதி, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருங்காலத் தலைவர் வந்து நிற்கின்றார்” – என்றார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரா?” என்று கேட்டார்கள் ஜனாதிபதியுடன் வந்தவர்கள்.

“ஆம்… இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிறீதரன் எம்.பியின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் இவர்தானே….” என்று பதிலளித்தார் ஜனாதிபதி.

அப்படியே சார்ள்ஸ் நிர்மலநாதனை அறைக்குள் அழைத்துச் சென்று உரையாயாடினார் ஜனாதிபதி.

வடக்கின் அபிவிருத்திக்குப் புலம்பெயர் தமிழர்களை உதவச் சொல்லுங்கள் என்று சார்ள்ஸ் எம்.பியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். – என்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் – மொட்டுக் கட்சி எம்.பி. சந்திரசேன கோரிக்கை.

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடவே முடியாது; இந்த விடயத்தில் எந்த விளையாட்டும் எடுபடாது – இப்படி எஸ்.பி. கூறுகின்றார்.

ஆர்.ஆரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்!

தாய்மொழிப் பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்றவையே: மலேசிய கூட்டரசு நீதிமன்றம்.

இந்தியத்தமிழர்/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, விவாதத்தை எதிர்காலத்துக்கு ஒத்தி வையுங்கள்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்த கணவர்; கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி மரணம்

ராவணன் அருவியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.