காணாமல்போன குடும்பஸ்தர் 5 நாட்களின் பின் சடலமாக மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்றிரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டது.

40 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் காணாமல்போயுள்ளார் என அவரின் மனைவியால் ஐந்து நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.