பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்க முயன்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்றும், எந்த ஆட்சிக் கட்சி , எதிர்க்கட்சி என எந்த தரமும் பாராது எதிர்கட்சிகளுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கவோ அல்லது தாக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தாக்க முயன்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எம்.பி. தெரிவித்த கருத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பது , சபாநாயகரினது முன்னணி அதிகாரிகளது கடமை என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்தி அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பில் முறையான விசாரணை தேவை எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.