மாமியார் சீக்கிரம் சாகணும்; மருமகள் வைத்த நூதன வேண்டுதல்

மாமியார் மீது கொண்ட கோபத்தை மருமகள் வெளிப்படுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கடவுளே தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், காதலியை என்னுடன் சேர்த்து வை இப்படி பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி கோயில் உண்டியலில் பக்தர்கள் கடிதம் எழுதிப் போடுவது வழக்கம்.சிலர் ரூபாய் நோட்டுகளில் வேண்டுதல்களை எழுதி அதை உண்டியலில் போடுவதும் வழக்கம். ஆனால், கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார்.

கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது ரூ.50 நோட்டு ஒன்றில் வெள்ளைப் பகுதியில் ஏதோ எழுதப்பட்டு இருந்ததை, கோவில் ஊழியர் படித்துப் பார்த்தார். அதில் என் மாமியார் விரைவில் சாக வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்த ரூபாய் நோட்டு சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மாமியார் உயிரிழக்க வேண்டும் என மருமகள் ரூபாய் நோட்டுகளில் எழுதி உண்டியலில் போட்டு வேண்டுதல் வைத்த சம்பவம் கர்நாடகாவில் பேசு பொருளாகி உள்ளது.

மேலதிக செய்திகள்

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

Leave A Reply

Your email address will not be published.