யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது – ஜாஃபர் சாதிக்கின் வாக்குமூலம்

போதை கடத்தல் விவகாரத்தில் ஜாஃபர் சாதிக் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெத்தாபேட்டமைன் என்ற போதை பொருளின் Raw substance சுமார் 2000 கோடி மதிப்பீட்டில் பிடிபட்ட நிலையில், அதனை கடத்திய ஜாஃபர் சாதிக் என்பவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசியல், சினிமா என பல பிரபலங்களுடன் அவர் நெருக்கமாக இறந்ததாக கூறப்படும் நிலையில், அவர் சில படங்களை தயாரித்தும் இருக்கின்றார். அவரின் இந்த போதை பொருள் தடுப்பில் வேறேதேனும் பிரபலங்களுக்கும் தொடர்பு இருக்குமா..? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

என்.சி.பி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து என்சிபி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக்கிற்கும் திரைத்துறை பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டு, விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய திரைப்பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.

ஜாஃபர் சாதிக்கிற்கும் அரசியல், திரைத்துறை, கட்டுமானத்துறையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரே வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கும் பாலிவுட் திரைத்துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா…? என்ற விசாரணையும் நடைபெற்று வருவதாக என்.சி.பி அதிகாரி கூறினார்.

மேலதிக செய்திகள்

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

மாமியார் சீக்கிரம் சாகணும்; மருமகள் வைத்த நூதன வேண்டுதல்

Leave A Reply

Your email address will not be published.