கஜேந்திரகுமாருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகச் சபையில் சுமந்திரன் போர்க்கொடி!

தியாக தீபம் நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கொண்டு வந்த விசேட கூற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அனுமதி வழங்க மறுத்ததையடுத்து அதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றினார்.

சுமந்திரன் எம்.பி. தனது உரையில்,

“சபாநாயகரே! நான் இரண்டு காரணிகளை இந்தச் சபையில் கூற விரும்புகின்றேன். நானும் பொது அலுவல்கள் குழுவின் உறுப்பினராக உள்ளேன். கட்சித் தலைவர்கள் மக்கள் சார் விடயங்களை சபையில் கேட்பதில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் ஒரு நபராகத் தனிக் கட்சியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொரு நாளும் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பினார். அப்போது எவரும் தடை விதிக்கவில்லை. அதுபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கூற்று எந்தவொரு நீதிமன்ற விசாரணையிலும் இருக்கும் விடயம் இல்லை. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விடயம் தொடர்புடையது. சபாநாயகரே நீங்கள் தவறான முறையில் சபையில் வழிநடத்துகின்றீர்கள். எனவே, சபையை உடனடியாக ஒத்திவைத்து இந்த விடயத்தைத் தீர்க்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.