எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நிலை குறித்து சந்தேகம்?

தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களை படைத்த இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டார்.

அதன்பின் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் உபகரணங்களில் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின் அவருடைய மகன் அவ்வப்போது அவரது உடல் நிலை குறித்த தகவல்களை வெளியிடுவார். சமீபத்தில் கூட தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டார்.

ஆனால் திடீரென்று தற்போது பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை, கடந்த 24 மணி நேரமாக பின்னடைவில் உள்ளதாக, அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே இதேபோன்று எஸ்பிபி-யின் உடல்நிலையில் சரிவைக் கண்டு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்த எஸ்பிபி-யின் உடல்நிலையில் பின்னடைவை ஏற்பட்டிருப்பது திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் மறுபடியும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையை தொடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.