திருமண பந்தத்தில் இன்று இணையவிருந்த ஒருவர் கடலில் மூழ்கி பலி

திருமண பந்தத்தில் இன்றைய தினம் இணையவிருந்த இளைஞர் ஒருவர் கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளார்.

களுத்துறை கட்டுகுருந்த கடலில் நீராடச் சென்ற 6 இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதனை தொடர்ந்து கடற்படையினரும் இப்பகுதி மக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு கடலில் காணாமல் போன இளைஞரின் திருமணம் இன்றைய தினம் நடக்கவிருந்த நிலையிலேயே இந்த பரிதாப சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

Comments are closed.