உகன நவகிரியாவ வாவியில் தோணி புரண்டதனால் 8 வயது சிறுவன் பலி.

அம்பாறை உகன நவகிரியாவ வாவியில் படகோட்டியுடன் மாணவர்கள் சிலர் நவகிரியாவ வாவியில் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.

பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்கள் இவ்வாறு தோணியில் சென்றுள்ளதுடன் தோணி சிறிது தூரம் சென்றதன் பின்னர் மீண்டும் கரைக்கு வருமாறு பெற்றோர்கள் அழைத்துள்ளபோதும் படகோட்டி பொற்றோரின் கோரிக்கையை புறக்கணித்து தொடர்ந்தும் படகை செலுத்திய நிலையில் படகு கவிழ்ந்துள்ளது.

தோணியில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் படகோட்டியும் நீச்சல் தெரிந்த ஏனைய சிறுவர்களும் உயிர் தப்பியதுடன் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

நவகிரியாவ கிராமத்தை சேர்ந்த மந்தார தாரக எனும் 8 வயது சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

படகோட்டியை கைது செய்துள்ள உகன பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.