ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து துமிந்த, அமரவீர, அழகியவன்ன நீக்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண, மஹிந்த அமரவீர ஆகியோர் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எனக் கூறி வழக்கு தொடுத்திருந்த நிலையில் , கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவண்ணவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீரவும் நீக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்கவிற்கு பதிலாக மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி.குணவர்தன, பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவன்னவிற்கு பதிலாக , மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே, மற்றும் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த சரத் ஏக்கநாயக்கவிற்கு பதிலாக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை இன்று (30) கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு செயற்குழுவினால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.