IMF சீர்திருத்தப் பணிகள் முடியும் வரை தேர்தல்கள் கிடையாது : ஜனாதிபதி அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் சபைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி , அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் அரசியலமைப்பு ரீதியில் நிதியளிப்புச் செயற்பாட்டின் பின்னரே வருகின்றது, எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும், அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அமைச்சரவைக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை தேர்தல் 2024 – மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் அதிகரிக்கும் புட்டாலம்மை: உருமாறிய வைரஸ் காரணமா?

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த கோர விபத்தில் 10 பேர் பலி… ஜம்மு – காஷ்மீரில் பயங்கரம்

இந்தியாவில் படிக்காத இளைஞர்களை விட படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லை – ஆய்வில் தகவல்

மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசாரப் போர் ஆரம்பம்!

இனியும் தாமதிக்காது ஐனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் தமிழ் பொது வேட்பாளர் பற்றி தமிழரசு முடிவெடுக்கவில்லை – யாழில் சுமந்திரன் தெரிவிப்பு.

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பு அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்!

ஐபிஎல் கிரிகெட் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கே.கே.ஆர்.

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

Leave A Reply

Your email address will not be published.