‘மொட்டு’ சார்பில் பஸில்களமிறக்கப்பட வேண்டும்! – ரஞ்சித் பண்டார எம்.பி. கோரிக்கை.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ச களமிறக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பஸில் ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பஸிலைப் பற்றி கேளுங்கள். ஆக அவர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதில் உள்ள தவறு என்ன?

வேலை செய்து காட்டிய தலைவருக்குப் பதவி வழங்கப்படுவதே மிக பொருத்தம். அதற்கான தகுதியான நபரே பஸில் ராஜபக்ச.

அதேவேளை, நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர். அவர் மொட்டுக் கட்சியை பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாமலுக்கு எதிராகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.