வன்முறையால் நின்ற தேர்தல் – மணிப்பூரில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு..!

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 19-ஆம் முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

குறிப்பாக, கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட, அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய சம்பவங்களும் நடைபெற்றன.

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மொத்தம் 47 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென அம்மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற தேர்தலில், 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

செய்தி வாசித்தபோது மயங்கி விழுந்த பெண் அறிவிப்பாளர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலி – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.