கம்போடியாவில் உள்ள ராணுவ முகாமில் குண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் பலி.

கம்போடியாவில் உள்ள ராணுவ முகாமில் குண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில்உள்ள காம்போங் ஸ்பெயூ மாகாணத்தின் பார்மோன் மாவட்டத்தில், ராணுவ முகாம் உள்ளது.

நேற்று இங்கு குண்டு வெடித்தது. சிறிது நேரத்துக்குப் பின் மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சில வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில், முகாமையொட்டி உள்ள பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்பை தொடர்ந்து, ராணுவ முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.