பாதாள உலகத்தை அச்சுறுத்திய கொடுங்கோலனை வெளியேற்றுங்கள்..அல்லது சர்வதேச சமூகத்திற்கு செல்வோம்..- சட்டத்தரணிகள் சங்கம்.

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து டிரான் அலஸ் இராஜினாமா செய்யாவிட்டால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்காவிட்டால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கொலைகார பாதாள உலக உறுப்பினர்களை ஒழிப்பதில் பாவம் இல்லை என டிரான் அலஸ் கடந்த வாரம் கூறியதை அடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும், மேற்படி பிரேரணை தொடர்பில் அமைச்சரின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் வினவியபோது, ​​கடந்த சில மாதங்களாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கும் சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடுமையான கருத்து மோதல் நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தில் உள்ள சமூக பொலிஸ் குழுக்களுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சியின் போது பொது பாதுகாப்பு அமைச்சர் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி மில்லியன் கணக்கான பணத்தைப் பல பிரபல சட்டத்தரணிகள் பெறுகின்றனர் என தெரியவந்தமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். .

நீதி நடவடிக்கைக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளை அம்பலப்படுத்தும் விசேட பிரச்சாரமொன்று நாளை முதல் முன்னெடுக்கப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தனக்கு எவ்வாறான மரண அச்சுறுத்தல்கள் வந்தாலும் பாதாள உலகத்தையும் போதைப் பொருளையும் இல்லாதொழிக்க அமைச்சர் டிரான் அலஸ் தன்னை அர்ப்பணிப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.