தமிழ் சிவிலியன்கள் கொலை : OIC உட்பட 5 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

கந்தளை பாரதிபுரம் கிராமத்தில் வசித்த நிராயுதபாணிகளான 8 தமிழர்கள் பாரதிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆயுதமேந்திய குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த போலீசார், பொதுமக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருந்ததாக உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அக் குற்றம் உறுதியானதையடுத்து நேற்று (28) பாரதிபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 போலீசாருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய சிறைத்தண்டனையை வடமத்திய மாகாண முன்னோடி உயர் நீதிமன்ற நீதிபதி விதித்தார்.

அங்கு, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு போலீசார் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

பாரதிபுரம் காவல்துறையின் முன்னாள் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீஸ் சார்ஜென்ட்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

1998 ஜனவரி 31 ஆம் திகதி அல்லது ஜனவரி 31 ஆம் திகதிக்கு நெருங்கிய ஒரு நாளில் கந்தளாய் பாரதிபுரத்தில் கொலை செய்யும் நோக்கத்துடன் , அவசரகால கட்டளை விதிகள் சட்டத்தின் 26 (1) வது பிரிவின் பிரகாரம் சட்டவிரோதமான சபையில் அங்கம் வகிக்கும் பிரதிவாதிகள் ஈடுபட்டதாக , திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.