ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிசினஸ் வீழ்ச்சி.

ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிசினஸ், சட்டென அதல பாதாளத்தில் வீழத் தொடங்கியிருக்கிறது. இதனால், தமிழில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட படங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன. தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக, ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வை ஏற்படுத்த, சிலர் முயற்சி எடுக்கிறார்கள்.

ஆனால், எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் ஓடிடி நிறுவனங்கள் உடன்பாடு காட்டவில்லையாம். ‘எங்களின் நஷ்டக் கணக்கைப் பார்த்தால், நீங்கள் பேச்சுவார்த்தைக்கே வர மாட்டீர்கள்’ என முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று சொல்ல, தத்தளிக்கிறது தமிழ் சினிமா.

Leave A Reply

Your email address will not be published.