Google Pay தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: கூகுள் என்ன சொல்கிறது தெரியுமா?

தற்போது ஒன்லைன் மூலமான பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு நிறுவனங்களும் இச் சேவையை வழங்க முன்வந்துள்ளன.

இவற்றுள் கூகுள் நிறுவனத்தின் Google Pay சேவையும் ஒன்றாகும்.

இப்படியிருக்கையில் பயனர்கள் மேற்கொள்ளும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை கூகுள் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதாக தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் அவ்வாறு தாம் எந்த தகவல்களையும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை என கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு பதில் அளிக்கையிலேயே கூகுள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.