தில்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் பலி

தில்லி விவேக் விஹாரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பிறந்த சில நாள்களேயான 6 பச்சிளம் குழந்தைகள் பலியாகினர்.

இந்த தீ விபத்தில் சிக்கிய 12 குழந்தைகளில், 6 குழந்தைகள் பலியாகினர், 6 குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட பிறந்த சில நாள்களேயான குழந்தைகள் கிழக்கு தில்லி அட்வான்ஸ் என்ஐசியூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ் கூறுகையில், “நேற்று இரவு 11:32 மணியளவில், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

2 கட்டடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 12 பச்சிளக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், மேலும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்”. என்று தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

தமிழ்ப் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது! – விக்கியிடம் ரணில் தெரிவிப்பு.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அநுரவின் ஆட்சியில் தீர்வு உறுதி! – விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு.

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் சண்டித்தனம்! – மூவர் கைது.

அரச நிகழ்வுகளைத் தேர்தல் பரப்புரை மேடையாக்காதீர்! – கிளிநொச்சியில் ரணில் முன்னிலையில் சுமந்திரன் இடித்துரைப்பு.

குஜராத் மாலின் கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து : 27 பேர் உயிரிழந்த சோகம்

Leave A Reply

Your email address will not be published.