கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) புதிய கோல் சாதனை.

உலகக் காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) புதிய கோல் சாதனையைப் புரிந்திருக்கிறார்.

சவுதி Pro லீக் காற்பந்தாட்டத்தில் அவர் அல் நாசர் (Al Nassr) அணிக்கு 2 கோல்கள் அடித்தார். அது அல்-இத்திஹாட்டுக்கு (Al-Ittihad) எதிரான ஆட்டம்.

அந்த லீக்கில் அவர் அடித்த மொத்த கோல் எண்ணிக்கை 35ஆக அதிகரித்தது.

இதற்குமுன்னர் லீக்கில் அதிகக் கோலடித்தவர் என்ற பெருமையை அப்டேராஸாக் ஹம்டல்லா (Abderrazak Hamdallah) வைத்திருந்தார்.

அணி முன்னாள் ஆட்டக்காரருமான அவர் 34 கோல்களுடன் முன்னணியில் இருந்தார்.

39 வயது ரொனால்டோ புரிந்துள்ள பல சாதனைகளின் வரிசையில் இதுவும் சேர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.