இந்தியாவில் பிடிபட்ட ISIS சந்தேக நபர்கள் , இலங்கைக்கு …..

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இதை உறுதி செய்தார்.

இந்த நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும் அவர்கள் அதனை மறுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர் பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த முடியும் என்றும் , தற்போதைய தகவல்களின்படி போதைப்பொருள் கடத்தல் குறித்த அவர்களிடமிருந்து தகவல்கள் வெளியாகி வருவதாக அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.