மன்னாரில் 09 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளி சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓட்டம்!

தலைமன்னாரில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சந்தேகநபர் , நேற்று (2) சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தக் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் , வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து தப்பியுள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கந்திய விஜயன் எனப்படும் அப்துல் ரஹ்மான் என்ற சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.