மொட்டுக் கட்சி எம்.பி. சஜித் பக்கம் தாவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 218 ஆவது கட்டமாக அம்பாறை, தெஹியத்தகண்டிய, சந்துன்புர தேசிய பாடசாலைக்கு 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையொன்றை வழங்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு இணைந்து கொண்டார்.

1971ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த அவர், தனது உயர் கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் படையில் இணைந்து பணியாற்றினார்.

அம்பகவெல்ல பிரதேச வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் பிரதானியாகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.