தேர்வு முடிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் ஆபத்து : பேராசிரியர் சம்பத் அமரதுங்க.

தமது உயர்கல்வி பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர், ஒருவர் தனது பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக்கில் பதிவிடுவதன் மூலம் , இன்னொருவர் அவரது பரீட்சை இலக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பகிரும் தகவலைப் பயன்படுத்தி வேறு யாரேனும் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தை நிரப்ப முடியும் என்றும், ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு, முழு கணினி அமைப்பையும் மாற்றிய பின்தான் உரிமையாளர் அந்த அணுகலைப் பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்காகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.