விமலுக்கு சக்திவாய்ந்த அமைச்சர் பதவி? ரணிலுடன் இணையும் 2 எம்பிக்கள்..?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவியை வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தேசிய நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு விமல் வீரவன்ச இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.