வடமராட்சியில் சஜித்தின் நிகழ்வில் அங்கஜனும் பங்கேற்பு!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டார்.

சஜித்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘பிரபஞ்சம்’ ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் 228 ஆவது கட்டத்தின் கீழ், யாழ். வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.