யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியுடன் சஜித் விசேட சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது.

யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (10) இரவு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் அக்கட்சியின் யாழ். மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெறும் நோக்குடன் சஜித் பிரேமதாஸ மேற்படி சந்திப்பை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.