நான் ஜனாதிபதியான இரவே பாராளுமன்றம் கலைக்கப்படும்.. எமக்கு 130 ஆசனங்கள் கிடைக்கும்..- அனுர

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அன்றைய தினம் இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தேவையான சூழ்நிலைகள் இன்று வந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமது கட்சி 120-130 இடங்களைப் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் தனது மூன்று உறுப்பினர்கள் நூற்றி இருபது அல்லது நூற்று முப்பது என்ற எல்லையை எட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.