யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய சஜித்தின் பாதுகாப்புப் பிரிவு!

யாழ். சுழிபுரத்தில் ஊடகவியலாளர்களைக் காணொளி பதிவு செய்ய வேண்டாம் என்று சஜித்தின் பாதுகாப்புப் பிரிவு மிரட்டியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (12) சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரிக்குப் பஸ் ஒன்றை வழங்கினார்.

அந்த பஸ்ஸுக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸ பஸ்ஸில் அமர்ந்து அதனைச் செலுத்துவதற்குத் தயாராகும்போது ஊடகவியலாளர்கள் அதனைக் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

உடனே அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்புப் பிரிவினர் ஊடகவியலாளர்களின் கமராவைக் கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.