முன்னாள் காற்பந்து வீரர் கெவின் கேம்பல் காலமானார்

ஆர்சனலின் (Arsenal) முன்னாள் காற்பந்து வீரர் கெவின் கேம்பல் 54 வயதில் காலமானார்.

அவர் எவர்ட்டன் (Everton), நோட்டிங்ஹம் போரெஸ்ட் (Nottingham Forest) ஆகிய காற்பந்து அணிகளிலும் விளையாடியவர்.

கெவின் இரு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகப் பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்தன.

“கெவின் கேம்பலின் இழப்பு வருத்தமளிக்கிறது. ஆர்சனல் அணியில் இருந்த அனைவருக்கும் அவரைப் பிடிக்கும்,” என்று ஆர்சனல் காற்பந்து அணி அதன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டது.

லண்டனில் பிறந்த கெவின் 1988ஆம் ஆண்டில் ஆர்சனல் அணியில் சேர்ந்தார்.

பலர் சமூக ஊடகங்கள் வழி அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.