மனைவியுடன் நடனமாடியதற்காக வாலிபர் ஒருவரின் தலையை துண்டித்த கணவன்!

இசை நிகழ்ச்சியின் போது கழுத்து துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர் தொடங்கொட ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த மெனுர நிம்தர வணிகசேகர என்ற 20 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனைக் கொன்ற சந்தேக நபர் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறை, கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த பெண், தான் பணிபுரியும் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தால் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை சந்தேகநபர் அறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்

ரணிலுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க முடியாது – மொட்டு கட்சி.

மாகாண சபைகள் ஒழிக்கப்படாது.. தொடர்ந்து இயங்கும்..- லண்டனில் அனுர.

1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கிளிநொச்சியில் மூவர் கைது…

சல்மான் கான் போல் , எலோன் மஸ்க்கை அழைத்து வர முயற்சிக்கிறார்கள்.. ஏமாறாதீர்கள்..- சுனில் ஹந்துன்நெத்தி.

நடிகை ஷில்பா மீது ரூ.90 லட்சம் மோசடி வழக்கு

கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூன் 20 வரை போலீஸ் காவல்!

Leave A Reply

Your email address will not be published.