மகாராஜா கெமுனுவின் கனடா பாய்ச்சல் நாடகம் வெலிக்கடையில் ..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சஞ்சீவ மஹாநாமவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அவர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி குறித்து அரசு ஆய்வாளர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய இரசாயண பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் உத்திக பிரேமரத்ன மற்றும் மேற்படி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என பொலிஸார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.