அரகலய பங்காளிகளின் புதிய கூட்டணி உதயம் – எதிர்வரும் தேர்தல் களத்தில் பங்கேற்பர் !

அரகலய மக்கள் போராட்டத்தில் இணைந்து கொண்ட பல கட்சிகள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய புதிய கூட்டணி இன்று (19) காலை 10.00 மணிக்கு கொழும்பு 07, விஜேராம மாவத்தையிலுள்ள சிங்க கிளப் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புதிய கூட்டணி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

சோசலிச மக்கள் மன்றம், புதிய ஜனநாயக மார்க்ஸ் லெனினிஸ்ட் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் போராட்ட செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, நுவன் போபகே, லஹிரு வீரசேகர, ஸ்வஸ்திகா அருள்லிங்கம், கலாநிதி கல்பா ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.