ஹஜ்ஜில் பங்கேற்ற 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் பலி!

இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்ற 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறந்த 550 பேரில், 323 பேர் எகிப்தியர்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் கடுமையான நீரிழப்புடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர்கள் பலர் நசுங்கி மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.