தென் கொரியா பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழப்பு.

தென் கொரியாவின் சியோலில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலில் இருந்து 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டிருந்த வேளையில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லித்தியம் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 18 சீன பிரஜைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன. மேலும், இறந்தவர்களில் லாவோட்டியர்கள் மற்றும் தென் கொரியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்துள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் முதல் மடிக்கணினிகள் வரை பல்வேறு வகையான பேட்டரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, சியோலில் உள்ள முன்னணி பேட்டரி தொழிற்சாலைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.