குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் உயிரிழப்பு!

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பேராதனை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சிவகுமார் அந்தோனி டெரிண்டா (வயது 44) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் கடந்த 19 ஆம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தின் மஸ்கெலியா கிலன்டில் தோட்ட கிலன்டில் பிரிவில் பணிபுரிந்து கொண்டு இருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.