கிளப் வசந்தாவின் மனைவி கவலைக்கிடம்.. அவரது கை பையில் இருந்தது பாதாள குழு ஆயுதம்.

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த வசந்த சுரேந்திர பெரேராவின் மனைவி கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மோசமான உடல் நிலை காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, அவரது கைப்பையில் காணப்பட்ட துப்பாக்கி சட்டவிரோத துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

அதன்படி, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.