கிரீஸில் வாரத்துக்கு 6 நாள் வேலை.

கிரீஸ் வாரத்துக்கு 6 நாள்கள் வேலை செய்வதை வழக்கத்துக்குக் கொண்டுவருகிறது.

சுருங்கும் மக்கள் தொகையையும் ஆள் பற்றாக்குறையையும் சமாளிக்க அதை நடைமுறைப்படுத்துவதாக The Guardian செய்தி நிறுவனம் சொன்னது.

24 மணிநேரச் சேவை வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்குத் திட்டம் பொருந்தும்.

அதன்படி ஊழியர்கள் கூடுதலாக ஒருநாள் வேலை செய்வர் அல்லது நாளொன்றுக்குக் கூடுதலாக
2 மணிநேரம் செய்வர்.

அதற்கு அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.

சில சமயங்களில் ஊழியர்கள் வேலை நேரத்தைக் கடந்து கூடுதலாக வேலை செய்தாலும் அதற்கான சம்பளத்தைப் பெறமுடியாமல் தவிக்கின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளுக்குத் திட்டம் தீர்வாக இருக்கும் என்று கிரீஸ் அரசாங்கம் நம்புகிறது.

தொழிற்சங்கங்கள் திட்டத்தைச் சாடியுள்ளன.

உலகெங்கும் வார வேலைநாள்களைக் குறைக்க முயற்சி எடுக்கப்படுகிறது…கிரீஸ் வித்தியாசமாக வேலை செய்யும் நாள்களைக் கூட்ட எண்ணுகிறது என்று அவை கூறின.

Leave A Reply

Your email address will not be published.