மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினம்: நாடாளுமன்றத்தில் பிரேரணை முன்வைப்பு – நாளை விவாதம் நடைபெறும்.

மலையகத் தொழிற்சங்கத் தியாகிகளை நினைவுகூருவதற்குத் தினமொன்றைப் பிரகடனப்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெறவுள்ளது.

ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்துமாறு வேலுகுமார் எம்.பி. கோரிக்கை முன்வைக்கவுள்ளார்.

மலையகத் தொழிற்சங்கத் தியாகிகளை நினைவுகூருவதற்கு அரச அங்கீகாரத்தடன் தினமொன்று அவசியம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தாலும் பல வருடங்களாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வேலுகுமார் எம்.பியால் இது தனிநபர் பிரேரணையாக சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.