வீட்டு வன்முறை அல்லது குடும்ப வன்முறைகள் என்றால் என்ன? ( 2 )


வீட்டு வன்முறை அல்லது குடும்ப வன்முறைகள் என்றால் என்ன?: கோதை (பாகம் இரண்டு)

கடந்த பதிவில் குடும்ப வன்முறை அல்லது வீட்டு வன்முறையின் தன்மைகளை எழுதியிருந்தேன். இதன் பரந்த விபரங்கள் காரணத்தால் இதைத் தனியே ஒவ்வொரு நாடுகளுக்கென பார்க்க முடியா விட்டாலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வன்முறையால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் அல்லது எப்படி இவ்வன்முறை வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.  ஒரு சகோதரி இந்தியாவில் இது குறித்து எவ்வாறான சிக்கல்களுக்கு பெண்கள்  முகம் கொடுக்கிறார்கள் என்பதையும் இலங்கையையைச் சேர்ந்த ஒரு சகோதரி பெண்கள் இதை எவ்வாறு தம் மீதே குற்றமாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் கீழே எழுதியுள்ளார்கள்.

 

ஒரு உறவில் வன்முறை கலந்துள்ளது என்பதை எவ்வாறு அறிவது?

 • உங்கள் பெயரை ஏளனப்படுத்துவது அல்லது உங்களைத் தாழ்த்தி அவப்பெயர்களைச் சொல்லி அழைப்பது.
 • கல்வி நிலையங்கள், வேலை இடங்கள் போன்றவற்றிக்கு போக விடாமல் தடுப்பது அல்லது குடும்ப உறுப்பினர்கள் நட்புகளை சந்திப்பதிலிருந்து தடுப்பது.
 • நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள் அல்லது அணிய விரும்பும் ஆடைகளைக் கட்டுப்படுத்துவது.
 • நீங்கள் எடுக்க வேண்டிய மருந்துகளை எடுக்க விடாமல் அல்லது எடுக்கும் நேரங்களைக் கட்டுப்படுத்துவது.
 • உங்கள் மீது ஏதோ ஒன்றிற்காக பொறாமைப்பட்டு உங்களை அளவுக்கதிகமாக தமது உடமையாக்கப் பார்ப்பது.
 • எந்தவிதமான காரணமும் இன்றி உங்களைத் தனக்கு விசுவாசமில்லாதவராய் சித்தரிப்பது.
 • மதுவிற்கு அல்லது போதைப் பொருட்களை எடுத்து விட்டு அதன் பாவனை காரணமாக உங்களை அவமதிப்பது அல்லது உடல், உள வன்முறைகளைத் தோற்றுவிப்பது.
 • ஒரு வைத்தியரை அல்லது ஒரு சுகாதார நல அதிகாரியைச் சந்திப்பதை தடுப்பது.
 • கத்தி அல்லது வேறு வகை ஆயுதத்தால் உங்களை காயப்படுத்தப் போவதாக பயமுறுத்துவது.
 • உங்கள் பிள்ளைகளை அல்லது செல்லப்பிராணிகளை தாக்கப் போவதாக உங்களை பயமுறுத்துவது .
 • உங்கள் விருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்ள அல்லது பாலியல் செயல்களில் ஈடுபட உங்களைக் கட்டாயப்படுத்துவது.
 • தனது வன்முறை சார்ந்த விடயங்களுக்கு உங்களைக் குற்றம் சாட்டுவது.
 • சமூக உறுப்பினர்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் பாலின அடையாளத்தைச் சொல்லும்படி கட்டாயப்படுத்துவது.
 • நீங்கள் ஒருபால் உறவில் அல்லது திருநங்கையாகவோ திருநம்பியாகவோ இருக்கும் பட்சத்திலும் இவ்வாறான வீட்டு வன்முறை அல்லது குடும்ப வன்முறையை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு .

Why The Adultery Law Verdict Shows Promise For A More Gender-Sensitive Legal System

இந்தியாவிலிருந்து ஜோ (சமூக ஆர்வலர், கல்லூரிப்பேராசிரியர் & பெண்ணியவாதி )

 • பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தையும் இந்தியா ஏற்றுக்கொண்டது,
 • இவை இரண்டும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமைகள் வழங்கப்படுவதுடன், எந்தவிதமான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படாது இருக்க வேண்டியதையும் உறுதிசெய்கின்றன.
 • இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கனவே அரசியலமைப்பின் 15 வது பிரிவுப்படி , மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடைசெய்வதற்கு வழி செய்துள்ளது.
 • பிரிவு 15 (3) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு வசதிகள் செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நோக்குடன் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் நிறைவேற்றப்பட்டது. “வீட்டு வன்முறை” என்ற வார்த்தையில் அனைத்து வகையான உடல், பாலியல், வாய்மொழி, உணர்ச்சி மற்றும் பொருளாதார இயல்பு துஷ்பிரயோகம்
 • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கணவர் வீட்டு பெண்கள் அல்லது அவரது உறவினர்கள், சட்டவிரோத வரதட்சணை கோரிக்கைகளால் ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் திருமண கற்பழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் அளவுக்கு இந்த வரையறை பரந்த அளவில் உள்ளது
 • தீங்கு விளைவிக்கும், காயத்தை ஏற்படுத்தும், உடல்நலம், பாதுகாப்பு, ஒரு பெண் அல்லது அவரது உறவினர்களுக்கு சட்டவிரோத வரதட்சணை கோரிக்கைகளால் ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் திருமணபந்தத்திலுள்ள பாலியல் வல்லுறவையும் உள்ளடக்கும் அளவுக்கு இந்த சட்டத்தின் வரையறை பரந்த அளவில் உள்ளது
 • இந்தச் சட்டம் ஒரு பெண்ணுக்கு திருமணமான அல்லது பகிரப்பட்ட வீட்டில் வசிக்கும் உரிமையைப் தருகிறது, பண நிவாரணம், இழப்பீட்டை பெற்று தருகிறது.
 • மற்றும் பாதுகாப்பைப் பெறுவதற்கான உரிமை உத்தரவுகளை வழங்குவதற்கான உரிமை என பெண்களுக்கு சட்டப்படியான உரிமைகளையும் பல சலுகைகளையும் பெற்றுத்தரும் வண்ணம் சட்டங்கள் இயற்றியுள்ளனர்.
 • நீதிமன்றத்தில் புகாரை தாக்கல் செய்வதற்கான செயல்முறை பாதிப்பிற்கு உள்ளான நபர், அவர் சார்பாக சாட்சியும் ஒரு போலீஸ் அதிகாரியை  அணுகலாம் அல்லது சட்டத்தின் கீழ் உத்தரவுகள் அல்லது நிவாரணங்களைப் பெறுவதற்காக நேரடியாக ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு புகார் அளிக்கலாம். நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் விசாரணையை துவங்க வேண்டும்.. அதிகபட்சம் 2 நாட்களுக்குள் விசாரணை தேதி குறித்த அறிவிப்பை மாஜிஸ்திரேட் வழங்க வேண்டும். . 4. முதல் விசாரணையின் 60 நாட்களுக்குள் வழக்கை தீர்ப்பதற்கு நீதிமன்றம் உதவ வேண்டும்..
 • இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498 ஏ இன் கீழ் ஒரு புகாரையும் பதிவு செய்யலாம், இது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அவரது உறவினருக்கும் தண்டனையை பரிந்துரைக்கிறது. நேரடியாக பாதிக்கப்பட்ட பல பெண்களிடம் கலந்துரையாடியதில் இதில் நடைமுறை சிக்கல்கள் பலவற்றால் பெண்கள் கட்டுண்டு கிடக்கிறனர். தன் குழந்தைகள் நலனைக்கருதி பெண்கள் சகித்து போகவே விரும்புகின்றனர். அப்படி எந்த வழியும் அற்று வழக்காடு மன்றங்களை அணுகினால், சட்டத்தால் பல சலுகைகள் இருப்பினும் இந்த சட்டம் நீதியை நடமுறைப்படுத்தும், காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்றங்கள் பெண்களை நடத்துவது மிகவும் அவமரியாதையாகவேயாகும். ஒரு நிலையும் அற்று கணவனை பிரிய துணிகையில் சட்டத்தால் உதவ வேண்டிய நீதிமன்றங்கள் வழக்கை இழுத்து இழுத்து குழந்தைகளுக்காக என பெண்ணை மறுபடியும் சிக்கலில் தள்ளுவதே வழமையாக உள்ளது.

state news News : பெண் பாதுகாப்பு; சுதந்திர, ஜனநாயக நாடு என பீற்றிக் கொள்வது சரியா? - Women safe; Does freedom, democratic India is corect? | Samayam Tamil

இனி சகோதரி பாமினி ராஜேஸ்வர முதலியார் (Bamini Rajeshwaramudaliyar UK) தன்னுடைய கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்கிறார். 

பல ஆண்களும், சில பெண்களும் control மனப்பான்மையால் மறுபாதியை அடக்கி ஒடுக்கி தமது கட்டுப்பாட்டில் வைக்க என்னவும் செய்வார்கள்.

அவர்கள் கட்டுப்பாட்டை இழப்பது போல் உணரும் போது violence ஆக நடப்பார்கள்.

இதனால் சில இடங்களில் கொலைகளும் நடந்து விடுகிறது.

அதனால் domestic, emotional, sexual violence நடக்கும் போது , நான் அன்பு காட்டுவது குறைந்ததால்தான் அவர் என்னை வதைக்கிறார் என உங்களை நீங்கள் குறை கூறி பொறுத்துப் போகாதீர்கள்.

இன்று பல இடங்களில் இளம் சமுதாயம் mental health issues ஆல் கஷ்டப்படுவதற்கு இப்படியான சூழ்நிலையும் காரணம் ஆகும்.

அதனால் அன்பு என்று அடித்தல், உதைத்தல்  வசைபாடல் என்பவற்றை பொறுத்துப் போவதை தவிருங்கள்.

கலாச்சாரம் என உங்களை நீங்கள் damage பண்ணாதீர்கள்.

DOMESTIC ABUSE IS NOT OUR CULTURE

Do not confuse violence with love

 தொடர்ந்தும் இது குறித்த பார்வைகள் பதிவு செய்யப்படும்……

Leave A Reply

Your email address will not be published.