ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய வரையறைகளுக்குட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

நாட்டில் 19,500 ஆரம்பப் பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர், மகளிர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1,500 சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையங்களாக இயங்குவதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.