கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதி பொதுமக்களுக்காக திறப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பகுதி பொதுமக்களுக்காக நேற்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளது.

சுகாதார கட்டுப்பாடுகளுக்கமைய வரையரைகளுடன் வெளியேறும் பகுதி திறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பயணி ஒருவருக்கு 3 பேரை விருந்தினர் பகுதிக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.