அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த ஒஸ்கார் நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

உலக அளவில் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வருடந்தோறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.

சினிமாத் துறையின் அதிஉச்ச விருதான ஒஸ்கார் விருதினை பெற்றுக்கொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள திரைப்பட பிரபலங்கள் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 93 வது ஒஸ்கார் நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் (2021) பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஒஸ்கர் விருது வழங்கும் விழா 2021 ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒஸ்கார் வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான திகதி மாற்றியமைக்கப்பட்ட நான்காவது முறை இதுவாகும்.

இதற்கு முன்னதாக 1938 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்சில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு, 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது மற்றும் 1981 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரேகன் கொல்லப்பட்டது ஆகிய மூன்று சந்தர்ப்பங்களுக்காக மட்டுமே ஒஸ்கார் விருது வழங்கும் விழாவிற்கான திகதிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.

தற்போது வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்கார் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.