கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் வி.க சம்பியனானது

கரவெட்டி நவசக்தி விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது நிறைவை முன்னிட்டு வடமராட்சி மற்றும் பருத்தித்துறை லீக்கிற்கு உட்பட்ட அணிகளுக்கிடையில் நடாத்திய
35 வயதுக்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் வினையாட்டுக் கழக அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாாட்டுக் கழக அணி வெற்றி பெற்று சம்பியனானது.

கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பாக கைலாஸ், பிரசாந்தன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

ஆட்ட நாயனாக பாக்கியராஜ் அவர்களும், தொடராட்ட நாயகனாக கைலாஸ் அவர்களும்
சிறந்த கோல் காப்பாளராக முகுந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.