கொள்கை ரீதியான உடன்படிக்கைக்கு தயார் – SJB தெரிவிப்பு
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இணையும் செய்திகள் தொடர்பில் SJB நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பதிலளித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கொள்கை ரீதியான உடன்படிக்கைக்கு அல்லாமல் தனிப்பட்ட ஒற்றுமைக்கு தயாராக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என அனைத்து கணக்கெடுப்புகளும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.