ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி கப்டன் வோர்னர், துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார்.

ஐதராபாத் அணிக்கு கப்டன் வார்னர் (48), மணிஷ் பாண்டே (54) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் (42), ராகுல் டிவாட்டியா (45) நம்பிக்கை தர, 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது

Leave A Reply

Your email address will not be published.