ஊரடங்கின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை கையளிக்க நடவடிக்கை

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அந்த சட்டத்தை மீறியவர்கள் உட்பட வாகனங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன.

அந்த வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டீ. விக்ரமரட்னவை பணித்துள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பாக 71 ஆயிரத்து 886 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 ஆயிரத்து 507 வாகனங்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.