உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை – சுகாதார அமைச்சு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைபெற வேண்டிய 39 நோயாளர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு முன்வந்துள்ளது.

அதற்கான சகல செலவீனங்களையும் சுகாதார அமைச்சின் சுகாதார அபிவிருத்தி நிதியத்தினால் செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 39 பேருக்கு நீண்ட கால சிகிச்சையளிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கார்டினல் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையூடாக இவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

Comments are closed.